×

எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான குற்றவியல் வழக்குகளை உயர்நீதிமன்றம் அனுமதி இல்லாமல் வாபஸ் பெற கூடாது : மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி!!

டெல்லி: எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான குற்றவியல் வழக்குகளை உயர்நீதிமன்றம் அனுமதி இல்லாமல் வாபஸ் பெற கூடாது என்று மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள எம்பி, எம்.எல்.ஏக்கள் மீதான குற்றவியல் வழக்குகள் அனைத்தையும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று பாஜக தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா கடந்த 2016-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ள வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியாவை நியமித்தது. இதையடுத்து வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது பதியப்பட்ட வழக்குகளின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்தார். அதில் கடந்த 2 ஆண்டுகளுக்குள்ளாக அவர்கள் மீதான வழக்குகளின் எண்ணிக்கை 17% அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் பல மாநிலங்களில் அரசுகள் அவர்கள் மீதான வழக்குகளை சிஆர்பிசி 321-ன் படி வாபஸ் பெறுகிறார்கள் எனவும் இதனை அனுமதிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் வினீத் சரண், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் இருக்கிறது. இதுதொடர்பாக இன்று அவர்கள் பிறப்பித்த உத்தரவில்,நாடு முழுவதும் உள்ள எம்பி, எம்.எல்.ஏக்கள் மீதான குற்றவியல் வழக்குகளை உயர்நீதிமன்றங்களின் அனுமதி இல்லாமல் மாநில அரசுகள் திரும்பப்பெற கூடாது. அதேப்போன்று விசாரணைகளை நடத்தி வரும் சிபிஐ உட்பட சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதிகள் அனைவரும் தற்போது உள்ள அதே பணியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும். ஒருவேலை அவர்கள் பணியிடம் மாற்றமோ அல்லது வேறு விசாரணைக்கு அமைக்கும் சூழலோ ஏற்படும் பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்து கண்டிப்பாக அனுமதி பெற வேண்டும்,என்று தெரிவித்தனர்.


Tags : LAS ,Supreme Court , அரசியல் கட்சிகள்
× RELATED அமலாக்கத்துறையின் கடும்...